
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்
மியான்மரில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை நேரப்படி அதிகாலை 2.57 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9ஆக பதிவானதாக, தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 22.51 பாகை வடக்கு அட்சரேகையிலும், 96.07 பாகை கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
