மியன்மார் நில அதிர்வு: 4 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட வயோதிப பெண்

மியன்மாரில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த வயோதிப பெண் ஒருவர் நான்கு நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியன்மாரில் கடந்த 28ஆம் திகதி 7.7 மெக்னிடியூட் அளவில் முதலாவது நில அதிர்வு பதிவாகியது.

இந்த நிலஅதிர்வினைத் தொடர்ந்து பல்வேறு அடுக்குமாடி கட்டடங்கள் சேதமடைந்தன.

சேதமடைந்த கட்டடமொன்றின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 63 வயது வயோதிப பெண் ஒருவரை, மீட்புக் குழுவினர் 4 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்டுள்ளனர்.

அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்