மியன்மார் நிலநடுக்கம் : இதுவரையில் 694 பேர் உயிரிழப்பு!

மியன்மரில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரையில் 694 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மேலும், குறித்த நிலநடுக்கத்தில் சிக்கி 1,670 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மியன்மார் நில அதிர்வை அடுத்து காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக சீனா மீட்பு குழுவொன்றை அனுப்பியுள்ளது.

இந்த மீட்பு குழுவில் வைத்தியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, 37 பேர் கொண்ட சீன மீட்பு குழு இன்று சனிக்கிழமை மியன்மாரை சென்றடையவுள்ளது.

மியன்மாருக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு சீனா தயாராகவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை உணவு, போர்வைகள், மருந்து, மின்பிறப்பாக்கி என 15 டன் நிவாரண பொருட்களை இந்தியா மியன்மாரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அனுப்பியுள்ளது.