மியன்மாரில் கட்டட இடிபாடுகளிலிருந்து 12 பாடசாலை மாணவர்களின் உடல்கள் மீட்பு!

மியன்மாரில் பாடசாலை கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 12 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த கட்டடத்திலிருந்து 12 மாணவர்களினதும்,ஒரு ஆசிரியரினதும் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இந்த கட்டடத்திற்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் படி கட்டடம் இடிந்து விழும் வேளையில் 50 மாணவர்களும் 6 ஆசிரியர்களும் கட்டடத்துக்குள் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.