மின் வெட்டு தொடர்பான அறிவித்தல்

எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதியும், 3ஆம் திகதியும், 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு இடம்பெறும், என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதேவேளை, ஜூன் 4ஆம் திகதி ஒரு மணித்தியாலம் மின் வெட்டு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூன் 5ஆம் திகதி மின்வெட்டு இடம்பெறாது, என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.