
மின் கம்பத்தில் மோதி வேன் விபத்து
அநுராதபுரம், பதவிய வீதியில் ரம்பகெப்புவெவ சந்திக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீதியால் பயணித்த வேன் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது வேனில் பயணித்த இருவர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேன் சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
