
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பிலான விசேட கோரிக்கை!
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக, அது தொடர்பில் ஆராய விசேட தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறு கோரி நேற்று வியாழக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.
தன்னிச்சையாக மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, இந்த அநீதி குறித்து விசேட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குறித்த தரப்பினர் இதனூடாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
