மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக வழக்குத் தாக்கல்

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என மின் பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கிய அனுமதி சட்டவிரோதமானது எனவும் வருடமொன்றுக்கு மூன்று தடவைகள் மின் கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை சட்டத்தில் இடமில்லை அத்துடன், மின் கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை முன்வைத்த 4 காரணங்களும் பொய்யானவை என மின் பாவனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக சுட்டிக்காட்டியுள்ளார்.