மின் கட்டணம் குறைப்பு

எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணம் குறைக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சார சட்டமூலத்தை இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

இதற்கான முன்மொழிவு நாளை அல்லது எதிர்வரும் திங்கட்கிழமை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி 0 முதல் 30க்கும் இடைப்பட்ட அலகொன்றுக்கான கட்டணம் 2 ரூபாயினால் குறைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 8 ரூபாவிலிருந்து 6 ரூபாவாக அந்த கட்டணம் குறைக்கப்படவுள்ளதுடன் 31 முதல் 60 வரையான அலகொன்றுக்கான கட்டணம் 20 ரூபாவிலிருந்து 9 ரூபாவாக 11 ரூபாவால் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன் 61 முதல் 90க்கு இடைப்பட்ட அலகொன்றுக்கான கட்டணம் 30 ரூபாவிலிருந்து 18 ரூபாவாக 12 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

91 முதல் 120 வரையான அலகொன்றுக்கான கட்டணம் 50 ரூபாவிலிருந்து 30 ரூபாவாக 20 ரூபாவினால் குறைப்பதற்கான யோசனை முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்