மின் கட்டணம் குறைப்பு

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த யோசனை தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை இறுதி தீர்மானம்  மேற்கொள்ளப்படவுள்ளது.

உத்தேச மின் கட்டண திருத்தம்  தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அண்மையில் பெற்றுக்கொண்டதாக அறிவித்து இருந்தது.

மேலும், மின்சார கட்டணத்தை  3.15 சதவீதத்தால் குறைக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்ததையடுத்து நாளை சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இறுதி கட்டணத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிக்க உள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்