மின் இணைப்பு பெட்டி வெடித்து தீ விபத்து: 2 கார்கள் தீயில் எரிந்து நாசம்

இந்தியாவில் சென்னை ஈஞ்சம்பாக்கம் விஜிபி லேஅவுட் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோடம்பாக்கம் medway  உரிமையாளர் பழனியப்பன் என்பவரது வீட்டின் போர்டிகோவில் இருந்த மின் இணைப்பு பெட்டி வெடித்ததால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் தீப்பிடித்து எரிந்தன.

தீ அதிவேகமாகப் பரவத் தொடங்கியதால் வீட்டில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேறினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நேற்றைய முன்தினம் சனிக்கிழமை இரவு குறித்த வீட்டில் மின்சார தடை ஏற்பட்டதை சரி செய்த மின்சார ஊழியர்கள் வீட்டின் உள்ளே மின்சார கேபிளில் பழுது இருப்பதாகவும் காலையில் சரி செய்கிறோம் என கூறிச் சென்ற நிலையில் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்