மின்வெட்டு தொடர்பான புதிய அறிவித்தல்
நாளை வெள்ளிக்கிழமை ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும், என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் நாளை இரவு நேரத்தில் மாத்திரம் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுலாகுமென இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்கள், கடந்த சில காலங்களில் பெய்த மழையினால் நிரம்பியுள்ளதால் எதிர்வரும் நாட்களில் மின்வெட்டு காலத்தை குறைக்க முடியும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றுமுன்தினம் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து 57.17% நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
