மின்னல் தாக்கி சிறுவன் பலி

மகியங்கனை நவமெதகம தெஹியத்தகண்டி பகுதியில் மின்னல் தாக்கி 10 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

10 வயது சிறுவனும் அவரின் ஆறு வயது சகோதரனும் வயலிலுள்ள மரம் ஒன்றில் ஏறி விளையாடிக்கொண்டிருந்த நிலையில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி மூத்த சகோதரன் உயிரிழந்துள்ளார். ஆறு வயது சிறுவன் கடுமையாக அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில் மகியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்