
மின்னல் குறித்து எச்சரிக்கை!
பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.
வழிமுறைகள் பின்வருமாறு:
வெளியில் அல்லது மரங்களுக்கு அடியில் இருக்க வேண்டாம், பாதுகாப்பான கட்டிடத்திலோ அல்லது மூடிய வாகனத்திலோ இருக்கவும்.
நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் போன்ற திறந்தவெளிகளில் தங்குவதைத் தவிர்க்கவும்.
கம்பியால் இணைக்கப்பட்ட தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
மிதிவண்டிகள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
மேலும், பலத்த காற்று காரணமாக மரங்கள் மற்றும் மின் கம்பிகள் விழக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.
