மின்தடை மற்றும் மின்சார கட்டணம் தொடர்பான அறிவித்தல்
இன்று திங்கட்கிழமை முதல் சுழற்சி முறையில் இரண்டரை மணிநேர மின்தடை அமுலாக்கப்படவுள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் மதியம் 12 மணிமுதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில், இரண்டரை மணிநேர மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக அதன் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த இரண்டு மூன்று நாட்களில், மின்சாரக் கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும், மின் கட்டணம் அதிகரிக்கப்படும் முறைமை குறித்து இரண்டு தினங்களுக்குள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
