மின்தடை நேரத்தில் வாள்வெட்டு தாக்குதல்

-யாழ் நிருபர்-

யாழ் . பருத்தித்துறை நகரில் உள்ள தையலகத்தினுள் புகுந்த முகமூடி அணிந்த நபர்கள் தையலகத்தை அடித்து உடைத்ததுடன் அதன் உரிமையாளரை வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை இரவு 7:30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது .

மின்சாரம் தடைப்பட்டதைச் சாதகமாகப் பயன்படுத்தி மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த நபர்கள் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

காயமடைந்த 44 வயதுடைய நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.