மின்தடை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்

வார இறுதி நாட்களிலும் விடுமுறைக் காலங்களிலும் அத்தியாவசியமற்ற பராமரிப்புப் பணிகளுக்காக திட்டமிடப்பட்ட அனைத்து மின்சாரத் தடைகளையும் இடைநிறுத்துமாறு இலங்கை மின்சார சபைக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகப்பூர்வ x வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.