
மின்சார வேலியில் சிக்கிய நபர் பலி
மஹியங்கனை பகுதில் மின்சார வேலியில் சிக்கி ஒருவர் இன்று புதன் கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
மஹியங்கனை பகுதியை சேர்ந்த மாபகதேவாவ (வயது – 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாபகதேவாவ அகவத்தை பிரதேசத்தில் வசிக்கும் விவசாயி தனது வயலுக்கு வரும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக மின்சார வேலிகளை அமைத்துள்ளார்.
இந் நிலையில் அவ்வழியாக சென்ற இருவரில் ஒருவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மின் கம்பிகளை இழுத்த நபர் கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக
பொலிஸார் தெரிவித்தனர்
உயிரிழந்தவரின் சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் பார்வையிட்டதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என கூறப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
