மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் உள்ளிட்ட 6 பேர் கைது

அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்த மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திவுலப்பிட்டி பகுதியிலிருந்து குறித்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று புதன்கிழமை காலை ஆரம்பமாகியிருந்தது.

இதன்காரணமாக, கொழும்பு – திவுலப்பிட்டி பிரதான வீதியூடான போக்குவரத்து ஹொரகஸ்முல்ல பிரதேசத்தில் தடைப்பட்டிருந்தது.

இந்தநிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டில் குறித்த ஆறு பேரும் ஹொரகஸ்முல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்