மின்சார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பை தீவிரப்படுத்த தீர்மானம்

மின்சார பொறியியலாளர்கள் சங்கம் மற்றும் பிற தொழிற்சங்கங்கள் இன்று முதல் தங்கள் தொழிற்சங்க நடவடிக்கையைத் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளன.

இதேநேரம் , துறைசார் அமைச்சரின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் பங்கேற்பது போன்றவற்றைத் தவிர்ப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த செப்டெம்பர் 4 ஆம் திகதி முதல் மின்சார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.