
மின்சார தடை இல்லை
இன்றைய தினம் மற்றும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களிலேயே மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படமாட்டாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே தினம் மற்றும் நோன்பு பெருநாள் ஆகியவற்றை முன்னிட்டு இவ்விரு நாட்களும் மின்தடை ஏற்படாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்விரு தினங்களை தவிர்த்து இவ்வாரத்தில் உள்ள ஏனைய நாட்களில் மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு மேலும் அறிவித்துள்ளது.
