மின்சார சபையில் திருட்டு அம்பலம்

சிலாபம் பிரதேசத்தில் அமைந்துள்ள மின்சார சபை அலுவலகத்தில் 120,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக மின்சார சபை தலைமை பொறியாளர் சிலாபம் தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த திருடர்கள் அலுவலகத்தின் ஜன்னல் வழியாக நுழைந்து மடிக்கணினி மற்றும் 35 கையடக்க தொலைபேசிகளை எடுத்து சென்றுள்ளதுடன் திருடப்பட்ட 35 கைத்தொலைபேசிகளையும் பாவனையிலிருந்து நீக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.