
மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கப்படலாம்
மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை மின்சார சபையின் மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதிய மின்சார சட்டத்தின் பல சரத்துகளை மாற்றாவிட்டால், மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கலாம். தற்போதைய சூழ்நிலையில் மின்சார கட்டணம் குறைக்கப்படும் என நம்ப முடியாது.
இதற்கிடையில், இடைநிறுத்தப்பட்ட மின் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறு கோரி இலங்கை மின்சார கூட்டுத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு உட்பட பல தொழிற்சங்கங்கள் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு மகஜர் ஒன்றை கையளிக்க சென்றிருந்த நிலையில் அவர்களின் மகஜரை ஏற்க யாரும் முன்வரவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
