மின்சாரம் தாக்கி மாணவன் பலி

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் மின்சாரம் தாக்கி மாணவன் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் க.பொ.த உயர் தரத்தில் கல்வி பயிலும் கண்ணதாசன் இராகுலன் (வயது-18) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

வீட்டில் வளர்க்கப்படும் ஆடு குட்டி ஈன்றதனால் அதனை வேறு இடத்துக்கு மாற்ற முற்பட்ட போது பலா மரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்குமிழில் இணைப்பில் ஏற்பட்ட மின் ஒழுக்கு மாணவனை தாக்கியது என விசாரணையில் தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு , பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.