
மின்சாரம் தாக்கி நிதி நிறுவன பணியாளர் படுகாயம்
-யாழ் நிருபர்-
சாவகச்சேரி நகரப்பகுதியை அண்மித்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் இன்று செவ்வாய்க்கிழமை மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார்.
அலுவலகத்தில் தண்ணீர் வரவில்லை என்ற காரணத்திற்காக தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக மேலே ஏறிய சந்தர்ப்பத்தில் மின்சாரம் தாக்கியதிலேயே அவர் படுகாயமடைந்துள்ளார்.
இதில் நுணாவில் பகுதியைச் சேர்ந்த கஜந்தன் (26 வயது) என்ற இளைஞனே படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையின் அவசர சிகிசடசைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிசடசை பெற்று வருகிறார்.




மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

