மின்சாரம் தாக்கி காட்டு யானை மரணம்
-பதுளை நிருபர்-
மஹியங்கனை வில்லுபிடிய ஆற்றில் பிட்டவான கந்துரு பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை காலை 7.00 மணியளவில் மின்சாரம் தாக்கியதில் யானை ஒன்று உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த காட்டு யானை 18 வயது மதிக்கத்தக்கது என மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
காட்டு யானை மின்சாரம் தாக்கி இறந்தமை தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்