மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

கொத்மலை, வெதமுல்ல புதிய பிரிவில் மரக்கறி செய்கை வயலில் அமைக்கப்பட்டிருந்த சூரிய மின் கேபிளில் சிக்கி ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

வெதமுல்ல புதிய பிரிவில் உள்ள தோட்டத்தில் வசித்து வந்த தங்கவேல் கிருஷ்ணகுமார் (வயது – 67) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இத்தோட்டத்தின் மரக்கறி வயல்களில் பயிரிடப்பட்ட மரக்கறிகளை வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக சோலார் பெனல் மூலம் இயங்கிய மின் கேபிளில் சிக்கி குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கொத்மலை பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்