மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மின்சாரம் தாக்கி ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.
ஐந்தாம் வட்டாரம்,  அனலைதீவு பகுதியைச் சேர்ந்த நடராசா துசியந்தன் (வயது 37) என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
அனலைதீவில் உள்ள ஐயனார் ஆலயத்தில் பாடல் ஒலிபரப்புவதற்காக மின்சார இணைப்புகளில் ஈடுபட்டபோது தவறுதலாக மின்சாரம் தாக்கியுள்ளது.
இந்நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது
உடற்கூற்று பரிசோதனைக்காக அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.