
மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
சீதுவ தம்பல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அப்பகுதியில் மின்சார கம்பி அமைப்பில் மின்சாரம் தாக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இறந்த நபரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்த நபரின் உடல் நீர்கொழும்பு மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சம்பவம் குறித்து சீதுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
