மின்சாரம் தாக்கி உயிரிழந்த பாடசாலை மாணவன்

அனுராதபுரத்தில் மின்சாரம் தாக்கியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கலேன்பிந்துனுவெவ தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் உல்பத்கம பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவனே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டின் பின்புறம் உள்ள குளியல் அறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, தண்ணீர் எடுப்பதற்காக மின் மோட்டார் இயக்கப்பட்டுள்ளது.

மின் மோட்டாரில் பொருத்தப்பட்டிருந்த கம்பியில் அவரது ஆடைகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், குளித்துவிட்டு ஆடைகளை எடுக்க முற்பட்டபோது மின்கம்பி அறுந்து உடலில் சுற்றியதில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கலேன்பிந்துனுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்