மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

இந்தியாவில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கோயில் திருவிழாவில் சீரியல் லைட் போடும்போது மின்சாரம் தாக்கி 18 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காட்டுக்கா நல்லூர் கங்கையம்மன் கோயில் மண்டல அபிஷேகம் திருவிழாவை முன்னிட்டு கோயிலை சுற்றி பந்தல் அமைத்து சீரியல் லைட் கட்டும்போது மேலே சென்ற மின் கம்பி தலையில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்