
மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு
கொழும்பு கொட்டாவை – ருக்மல்கம பிரதேசத்தில் இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
ருக்மல்கம பிரதேசத்தில் 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சமீபத்தில் திருமணமான இவரும் இவரது மனைவியும் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் குறித்த இளைஞர் மின் விசிறியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
வீட்டில் இருந்த பாதுகாப்பற்ற மின்சார விநியோகம் காரணமாக மின்கசிவு ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
