மின்சாரம் தாக்கி இளைஞன் மரணம்
பாதுக்க பிரதேசத்தில் மின்விளக்கு பொருத்தச் சென்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
பாதுக்க துன்னான கூடலுவில பிரதேசத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்து கொண்டு அப்பிரதேச ஆலயம் ஒன்றில் உதவியாளராக கடமையாற்றும் ஹொரணகே இஷார மதுஷங்க (வயது – 28) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உள்ளூர் கோவிலின் ஊர்வலம் வீட்டின் முன்புறம் செல்வதால், அதற்காக வீதி மின்விளக்கை பொருத்த சென்ற போதே அவர் இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் மீதான பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்