
மின்சாரம் தாக்கி இரு பெண்கள் உயிரிழப்பு
இந்தியாவில் விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த புளிச்சபள்ளம் கிராமத்தில், விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
புளிச்சபள்ளத்தைச் சேர்ந்த சத்தியவேணி, வீரம்மாள் ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
காற்று-மழை காரணமாக விவசாய நிலத்தில் உள்ள கம்பி வேலி மீது மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. இது தெரியாமல், விவசாய வேலைக்குச் சென்ற இரு பெண்கள் கம்பி வேலியைத் தொட்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
