மின்சாரக் கட்டணத்தை 75% அதிகரிப்பதற்கு அனுமதி

2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு, முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாளை புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் சராசரியாக 75% மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த அனுமதியை மின்சார சபைக்கு வழங்கியுள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.