மின்சாரக் கட்டணத்தில் திருத்தம்!

2024ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டண முன்மொழிவு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இந்த வாரம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும், காலாண்டிற்கு ஒரு தடவை மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் செய்ய கடந்த ஆண்டு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய, எதிர்வரும் ஜூலை மாதத்தில் திருத்தம் செய்யப்படவுள்ள மின்சாரக் கட்டண திருத்த முன்மொழிவு, இந்த வாரத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்