மின்கம்பத்தில் பாரிய குளவிக்கூடு: அச்சத்தில் மக்கள்

-பதுளை நிருபர்-

பதுளை மஹியங்கனை பிரதான வீதியில் பதுளை பிஹிலகடை சந்தியில் உள்ள மின்கம்பம் ஒன்றில் பாரிய குளவி கூடு ஒன்று காணப்படுவதால் குறித்த குளவி கூட்டை அகற்றி தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறித்த வீதியின் ஊடாகவே பதுளையில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்கு மாணவர்கள் செல்வதாகவும் அவ்விடத்தில் முச்சக்கர வண்டி தரிப்பிடம் ஒன்றும், புடவை வியாபார நிலையங்களும் ஏனைய வியாபார நிலையங்களும் காணப்படுவதனால் அவ்வியாபார நிலையங்களுக்கு செல்பவர்கள், மற்றும் அவ்வீதியில் பயணிக்கும் பாதசாரிகள் பாரிய அச்சத்துடனேயே அவ்விடத்தை கடந்து செல்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி குறித்த குளவி கூட்டை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்