மினுவாங்கொடயில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி!
மினுவங்கொட ரெஜி ரணதுங்க வித்தியாலத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர், இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது 35 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் , சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
