மினி லொறி கவிழ்ந்து விபத்து

இந்தியாவில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அய்யனார்கோவில் அருகே முன்னால் சென்ற மினி லொறி மீது கண்டெய்னர் லொறி மோதியது.

இதில், மினி லொறி சாலையில் கவிழ்ந்ததில், திருச்சி செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 5 கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் சாலையில் அணிவகுத்தன. மேலும் லொறியை காவல் துறையினர் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்