
மிதிகம பகுதியில் துப்பாக்கிச் சூடு
மாத்தறை – மிதிகம – பத்தேகம பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் முன் சுவரில் 3 தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாகவும், 1 தோட்டா ஜன்னல் பகுதியைத் தாக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.