மாவிலாறு உடைப்பினால் சேருவில பிரதேச கிராமங்கள் வெள்ளத்தில்!

திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் மாவிலாறு அமுனு (அணைக்கட்டு) உடைக்கப்பட்டுள்ளதன் காரணமாக பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக, அமுனவின் கீழ் உள்ள பல கிராமங்கள் கடுமையான வெள்ளச் சேதங்களை எதிர்கொண்டு முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன.

மாவிலாறு உடைப்பினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டு நீரில் மூழ்கியுள்ள கிராமங்கள் மற்றும் குடியிருப்புகள்:

சோமபுர
சிறிமங்கலபுர (LB 2 பகுதி உட்பட)
லிங்கபுரம்
தெஹிவத்தை
நீலபொல
சிவபுரம்
அரியமன்கேணி
ராக்குலி