மாவட்ட தொழில் மற்றும் தொழில் கல்வி சந்தை

மாபெரும் தொழில் மற்றும் தொழில் கல்வி சந்தை இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்ட தொழில் நிலையம் அக்ஸன் யுனிடி லங்கா இணைந்து நடாத்திய இந் நிகழ்வானது அரசடியில் அமைந்துள்ள தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு எதிர்காலத்தில் சுயதொழிலை மேற்கொள்ள கூடி ஆலோசனைகள், பாதுகாப்பாக வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை எவ்வாறு பெற்றுகொள்வது மற்றும் சுய தொழில் கற்கை நெறிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன், அக்ஸன் யுனிடி லங்கா பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கே.கஜேந்திரன், அக்ஸன் யுனிடி லங்கா நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் அன்ரனி சுரேஸ், மற்று இளைஞர்கள் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்