மாவடிபள்ளி பிரதேசத்தில் நீரில் மிதந்து வந்த நிலையில் சடலம் மீட்பு!

 

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நீரில் மிதந்து வந்த சடலம் ஒன்று பொதுமக்களால் கண்டறியப்பட்டது.

உடனடியாக தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேசத்தை சேர்ந்த கிருபாகரன் (வயது 53) என்பவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நெல்/அரிசி ஆலையில் பணியாற்றி வந்தவர் எனத் தெரியவருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காரைதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.