மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் பொதுக்கூட்டம்

-அம்பாறை நிருபர்-

கிழக்கு மாகாணத்தில் சிறப்பாக இயங்கும் ஜனாஸா நலன்புரி அமைப்புக்களில் ஒன்றான மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் நடப்பாண்டுக்கான புதிய தலைவராக அவ்வமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரான ஏ.எல்.எம். இம்தியாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமைப்பின் தலைவராக இயங்கிய ஏ.எம்.தஸ்மீன் அவர்களின் தலைமையில் நேற்று இரவு அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டபோதே ஏ.எல்.எம். இம்தியாஸ் தலைவராகவும் செயலாளராக தொடர்ந்தும் ஏ.எல்.எம். ஜிப்ரி, பொருளாளராக ஏ.எல்.எம். பாயிஸ், உப தலைவராக மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் முன்னாள் செயலாளர் எப்.எம். ரஹுபி, உப செயலாளராக பீ.எம். சஜீர், போசகராக எம்.எம்.எம். நளீம் ஆகியோருடன் கணக்கு பரிசோதகராக எம்.வை. றஹீம் தெரிவு செய்யப்பட்டார்.

ஏ.எல்.எம். இம்தியாஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவராக பணியாற்றிய காலத்தில் ஜனாஸா நலன்புரி அமைப்பின் வாகனம் பெற்றுக் கொள்ளப்பட்டது, இடங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் பொதுக்கூட்டம்
மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் பொதுக்கூட்டம்