
மாலைதீவு வெளிவிவகார அமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு
மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா கலீல், பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.
மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளினதும் இராஜதந்திர நடவடிக்கைகளில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தும் நீண்ட கால உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
நாட்டின் பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்துப் பாராட்டிய மாலைதீவு அமைச்சர், திட்டங்களுக்கு ஏற்ப செயற்படும் திறன் குறித்து நம்பிக்கை தெரிவித்தார்.
இரு நாடுகளினதும் பொருளாதாரத்தில் சுற்றுலாத் துறையின் முக்கிய பங்கு குறித்து கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
