மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக டிசம்பர் 03ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டதை அடுத்து தம்பலாமம் பிரதேச செயலகப் பகுதியில் மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.

குறித்த மாற்றுத் திறனாளிகள் தினத்தை தம்பலகாமம் பிரதேச செயலகம் மற்றும் மருதம் மாற்றுத் திறனாளிகள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி வழிகாட்டுதளுக்கிணங்க குறித்த நிகழ்வானது தம்பலகமம் தி/இ.சாரதா தமிழ் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

இம் முறை மாற்றுத் திறனாளிக் தொனிப்பொருளாக ” உள்ளடங்கிய மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக மாற்றுத் திறனாளிகளின் தலைமைத்துவத்தை மேம்படுத்தல் ” எனும் தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்பட்டது.

இதன் போது குறித்த பாடசாலையில் விசேட கல்வி பிரிவில் கற்கும் மாணவ மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றதுடன் மருதம் மாற்றுத் திறனாளிகளின் சங்க உறுப்பினர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்