மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

-கிண்ணியா நிருபர்-

தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள உடல் ரீதியாக பாதிப்படைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் ஒன்று இன்று வியாழக்கிழமை தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த மருத்துவ முகாமானது கப்பல் துறை ஆயுர்வேத தளவைத்தியசாலையுடன் இணைந்து தம்பலகாமம் பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

மருதம் மாற்றுத் திறனாளிகள் சங்கம் மற்றும் எகமுத்து ஆகிய மாற்றுத் திறனாளிகள் சங்கத்தை சேர்ந்த உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் இதில் கலந்து கொண்டனர்.

இதில் பல வைத்திய ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் வைத்திய சேவைகளும் சிறப்பாக இடம் பெற்றன.

இதில் கப்பல் துறை ஆயுர்வேத தளவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.ஏ.அனஸ்டீன், வைத்தியர்கள்,சமூக சேவைகள் உத்தியோகத்தர், சமூக சேவைகள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்