மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதாரத் திட்டம்!

-மட்டக்களப்பு நிருபர்-

மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சின்னப் புல்லுமலையில் அமைந்துள்ள கலிக்குளம் சி.பி.எம் நிறுவனத்தின் அனுசரணையுடன் வை.எம்.சி. ஏ நிறுவனத்தினால் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுஇ நன்நீர் மீன் வளர்ப்பு செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுவதோடு, வேளாண்மை செய்கை, மேட்டு நிலப் பயிர் செய்கை கால்நடை வளர்ப்பு போன்ற செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாரத்தை மேம்படுத்தும் வகையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட குளத்தில் தெரிவு செய்யப்பட்ட 15 மாற்றுத்திறனாளிகளுக்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் வகையில் மீன்பிடி உபகரணங்கள் நேற்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டதுடன், மீன்பிடியாளர்களுக்கான இளைப்பாறும் மண்டபம் அமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது

வை. எம். சி. ஏ நிறுவனத் திட்ட உத்தியோத்தர் அலெக்ஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சமூக சேவை உத்தியோகத்தர் டிமலேஸ், நன்னீர் மீன் வளர்ப்பு அதிகார சபையின் பிரதேச உத்தியோகத்தர் அகமட், கமநல அமைப்பின் பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகளின் அமைப்புகளின் உறுப்பினர்கள், வை. எம்.சி. ஏ நிறுவன உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்

இதன்போது குளத்தை அண்டிய பிரதேசத்தில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன், மீன் அறுவடை நிகழ்வும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்