மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி வழங்கி வைப்பு
-கிண்ணியா நிருபர்-
சமூக சேவைகள் திணைக்களத்தின் சமுதாய மட்ட புனர்வாழ்வு திட்டத்தின் கீழ், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிற்கு 210,000 ரூபா பெறுமதியான உபகரணங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
இத்திட்டம் குச்சவெளி பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ், சமூக சேவைகள் திணைக்களத்தின் நேரடியான கண்காணிப்புடன் கும்புறுப்பிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த ராஜகோபன் ரூபாதேவி என்பவருக்கு வழங்கப்பட்டது.
ரூபாதேவி நடக்க முடியாத மாற்றுத்திறனாளியாக இருப்பதுடன், சர்க்கரை நாற்காலியை பயன்படுத்தி தனது அன்றாட செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். இவ்வுதவி அவரது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, எதிர்காலத்தில் அவரது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் முக்கிய பங்களிப்பாக அமையும்.
சமூக சேவைகள் மாவட்ட இணைப்பாளர் த. பிரணவன். நிலையான அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு சரியான கணக்கு முறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
இத்திட்டத்தின் மூலம் தொழிலை விரிவுபடுத்தி, பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கக்கூடிய நிலைக்கு வளர வேண்டும் என்றும், இதற்கான கணக்கு வைப்பு முறைகள் ஒவ்வொரு மாதமும் பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகத்தின் ஊடாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், குச்சவெளி பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் குகதாசன், இத்திட்டத்தினை முறையாகப் பதிவு செய்து சரியான நடைமுறையில் செயல்படுத்தி, அதனை அபிவிருத்தி செய்வதற்கான தொடர் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும், என வலியுறுத்தினார்.
