மாற்றுத் திறனாளிகளுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை தி/கி/அல் ஹிக்மா வித்தியாலயத்தில் வைத்து வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகளை ரெக்டோ நிறுவனத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் தெரிவு செய்யப்பட்ட காத்திருப்பு பட்டியலில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் உட்பட சமூக சேவை உத்தியோகத்தர் ப.சுதன், ரெக்டோ நிறுவனத்தினர், கிராம சேவகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்